Tuesday, May 5, 2015

That is outside my boat!

That is outside my boat by Charlie Jones and Kim Doren is an interesting book I read in the past one month. Interestingly, it was not a planned reading!! I should say this book landed on my plate by fate! But I don’t regret reading it at all… Not even a single bit… I just loved reading it :-)! "Don’t only try to accept the troubles in your life, celebrate them, learn from them, grow from them and turn negatives into positives" is one of the strongest lessons from this book I would think. You may think you are out of choices but life gives you more choices!

In fact after I wrote the above sentence, I was wondering if I am doing justice to the book! There are too many good things about this book! The lessons it highlights from real people and their lives are so striking!! "The measure of a person is not what he does when he is standing on the top of the world, but what he does when he is standing on the deck and his ship is sinking" Wow… I was super impressed by this statement… it is not that we don’t know similar statements. But the simplicity with which the stories are narrated makes it so enjoyable and insightful. Good read!

Friday, May 1, 2015

ஈகையும் இரவாமையும்...

அறத்துப்பாலில் இல்லறவியலில் ஈகையை வைத்து, பொருட்பாலில் குடியியலில் இரவாமையை (அல்லது இரவச்சம்) வைத்த வள்ளுவரின் அறிவாற்றலை எவ்விதம் போற்றுவது!! வள்ளுவரிடம் மட்டுமல்ல, ஒளவையிடமும் இதே மனப்போக்கைக் காணலாம். ஏற்பது இகழ்ச்சி என்ற அடிக்கு அடுத்தது ஐயம் இட்டு உண்!  இரத்தலும் ஈயாமல்  இருத்தலும் இழிவு என்ற தெளிவு தமிழின் ஞானத்திற்கு ஒரு நல்ல உதாரணம்.

ஆனால், தெருமுனைகளில், கோவில் வாயில்களில் சின்னஞ்சிறு குழந்தைகளைக்காட்டி இரக்கும் பெண்களைப் பார்க்கும்போது இந்த ஞானம் பறந்துவிடுகிறது! குரங்காட்டிகளைப் போல, பாம்பாட்டிகளைப் போல, குழந்தையாட்டிப் பிழைப்பதா என்ற ஆதங்கமோ, இப்படிப் பிழைப்பதை விட குழந்தையைக் கொடுத்துவிட்டு ஒழிந்து போ என்ற கோபமோ அன்றன்றைய மனநிலைக்கேற்ப ஏற்படுகிறது.


கடந்த வாரத்தில், ஒரு தெருமுனை பிச்சைக்காரியிடம் காட்டிய கோபம் இன்னும் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டிருக்கிறது! இன்னும் சற்று அதிக நேரம் என் வாகனம் அந்த இடத்தில் நிற்கவேண்டியிருந்தால் அப்பெண்ணின் நிலை என்னவாயிருக்கும் என என்னால் அறுதியிட்டுச்சொல்ல இயலவில்லை. வள்ளுவரையும் ஔவையையும் நினைத்தவண்ணமாக நாட்கள் நகர்ந்தாலும், பல்சக்கரங்களில் சிக்கிய குப்பை தானும் அடிபடுவதுடன் சக்கரத்தின் இயக்கத்தையும் நிறுத்துவது போல, அந்நிகழ்ச்சி வாழ்வின் இயல்புநிலை குலைத்ததாகவே உணர்கிறேன்!!  அறம் பிழைத்தேனோ!

Thursday, April 16, 2015

Sarabham!

My visit to Sarabheswara temple yesterday made me think of life from a few different perspectives. The belief goes this way: on request of people from all over the world including Devas, Shiva took Sarabheswara form - a combination of bird, animal and human with goddess Shakti as his wings - to pacify Narasimhar after he destroyed Hiranyan.  When you are mentally or physically disturbed, if you worship Him, He will hug you too and pacify you is the belief.

Hiranyan was a very powerful person with a lot of magical powers and almost immortal; he ruled the world. But he was killed by Narasimhar - who could lift him just like that, put him on His lap with such an ease, pierce his body with just nails. And such a powerful Narasimhar was lifted by Sarabheswara just like that, He hugged Narasimhar like a mother hugging her child and cooled off His anger. And, Sarabheswara had to have Shakti as His wings. This story clearly shows that however powerful you are, there is always someone more powerful than you.

In life, many times we end up expressing anger in such a ferocious manner as Narasimhar. This anger, even if it is righteous, scares off people who we try to protect (or at least believe to protect) and they fear coming near us. On the other hand, though the anger makes us act, it also prevents from coming back to normalcy. It affects us very badly - much worse than the impact on those who receive the anger. If we get a Sarabheswara to cool us off and bring back normalcy at the right time, we are lucky. What would have happened in this case if Shakti did not come along as His wings? What do we do if we do not have a Sarabheswara? Can we be our own Sarabheswara? Hmm…

Narasimhar, the manifestation of the Protector destroyed, and Sarabheswara, the manifestation of the Destroyer, protected. In highly tensed situations, roles and expressions can change, will change looks like. 

The Protector decided to appear for a child and destroyed his father out of love. Strange it sounds, when you say this statement!

I don’t know if worshiping Sarabheswara will pacify us; but I am sure, thinking about the lessons from the story can  certainly do the trick. I think, it is the power of this civilization, that thought thru principles, values and translated them to stories! On 2nd May, there is a dance drama in Music Academy on Prahlada - the child for whose love the Protector manifested. I am thinking of an hour long drama, I acted as Prahlada when I was 11 years old! I am happy that I am born in this country, that taught me / keeps teaching me the deeper meaning of life!!

Sunday, April 5, 2015

அணில் குஞ்சு!!!

என் பரணில் ஓர் அணில் கூடு. அதிலிரண்டு அணில்குஞ்சு... கண் திறக்கவில்லை இன்னும்! வெளியில் எறிந்துவிடலாம் கூட்டோடு; விட்டால் உங்கள் விலை உயர்ந்த சூட்கேசுக்கு ஆபத்து அக்கா என்று வேலைக்காரியின் ஆலோசனை. எனக்கு சூட்கேஸ் முக்கியம்! அணிலுக்கு அது கட்டிய கூடு முக்கியம்! குஞ்சுக்கு வாழ்க்கை முக்கியம்! 15 வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் வீடுகளில்லை! மரங்கள் மட்டும்தான்!! 

வழக்கம்போல விடை தெரியா எனது வினாக்களுடன் நான்! இரண்டு உயிரை விட 10000 ரூபாய் முக்கியமா? மரம்வெட்டி வீடுகட்டி இப்போது கூடுவெட்டவும் தயங்காமல் திரிகிறோமோ? யார் வீட்டில் யார் இப்போது? யார் குடி கெடுத்தது யார்?

Monday, March 2, 2015

கொக்கென்று நினைத்தாயோ?

பக்தியோகம், கர்மயோகம் இரண்டையும் ஒப்பிட்டு, என் மனோபாவத்துக்கு பக்தியோகம் சரிபாடாது என்று முடிவுக்குவந்த போதிலும் கர்மயோகம் கடினமானதாக இருக்கிறது. பஞ்ச காலத்தில் விரதம் இருப்பதாய் அலட்டிக்கொள்வதில் என்றுமே எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. சந்நியாசம் என்பது உறவறுத்துப் போவதிலில்லை! உறவுகளோடு இருந்தாலும் பற்றின்றி இருப்பதே சரி என்று முயன்றாலும் சறுக்கத்தான் செய்கிறது! அகந்தையின்றி, பற்றின்றி ஆனால் முழு அக்கறையுடன் கடமைகளை நிறைவேற்றுவதே சரியான வழியென்று ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பே ஏற்றுக்கொண்டுவிட்ட போதிலும், அதைக் கடைபிடிப்பதில்தான் இன்றும் எத்தனை சறுக்கல்கள், எத்தனை குழப்பங்கள்! எது கடமை என்று உணர்வதிலேயே முதல் குழப்பம் ஆரம்பித்து விடுகிறது. குலத்தொழில் என்று இருந்திருந்தால் இந்த குழப்பம் இருக்காது என்று கொள்வதற்கில்லை. பெற்றோர் செய்த தொழிலை அதே அளவில் செய்வது மட்டும் போதும் என்பதில்லையே! புது உத்திகளை, புது கருவிகளைச் செய்து குலத்தொழிலை முன்னேற்றுவது தேவையா இல்லையா என்ற குழப்பம் அப்போதும் இருக்கத்தானே செய்திருக்கும்? ஆனால், விஸ்வாமித்திரர் கொண்ட கோபம் ஏற்படுத்திய திரிசங்கு சொர்க்கம் போலாகாமல், பகீரதன் கொணர்ந்த கங்கை போல முன்னேற்றம் அல்லது மாற்றம் ஏற்படுத்துவது எப்படி என்பது இப்போதைய கேள்வி!


பல யாகங்கள் செய்வதைவிடவும் தனது கடமைகளைச் சரியாகச் செய்தல் உயர்ந்தது. சரி. அதேசமயம் கொல்லவரும் பசுவையும் கொல்லும் சலனமின்மையையும் கைகொள்ளவேண்டியிருக்கிறது. எது கடமை என்று அறிந்து கொள்ளவே வாழ்வின் பாதி கழிந்தால், அதை, சரியாகச் செய்யக்கற்பதெப்போது? கர்வம் கழிப்பது எப்போது? கொக்காய் நினைத்து கர்மயோகியை எரிக்கத் துணியும் அகந்தையறுப்பது எப்படி? எப்போது? எதிரிலிருப்பது பசுவா, கொக்கா, வாசுகியா? உருவாக இருப்பது திரிசங்கு சொர்க்கமா, பொங்கி வழியும் கங்கையா? அப்படியே கங்கை வந்தாலும், அவள் வேகம் தாங்கி ஜடாமுடி விரித்துக் காக்கும் பேரன்பும் உரமும் வேண்டுமன்றோ?