Saturday, August 6, 2016

Travel 180 degrees!

ஒவ்வொருவரும் நெடுந்தூரப்பயணங்கள் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம்! பல்வேறு மனிதர்களை, கலாச்சாரங்களை, வாழ்க்கை முறைகளை, மொழிகளை, மொழியின் பிறழ்வுகளை,   இயற்கை அழகை, இயற்கையின் சீரழிவை, இயற்கையின் சீற்றத்தை, இயற்கையின் கொடையை இரசிப்பதற்காக மட்டுமல்ல! பரபரப்பான விமான நிலையங்களின் வேகம் உணர்ந்த அடுத்த சிலமணித்துளிகளில் பேரமைதி தரும் நீண்ட பயணநேரத்திற்காகவும்தான்!

புவியின் ஒருபக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குச் செல்ல, கிட்டத்தட்ட 20 மணிநேரமாகின்றது! வாசிக்க நினைத்த புத்தகங்களை வாசிப்பதற்கும், வாசித்ததை, கேட்டதை, நிகழ்ந்ததை அசைபோடுவதற்கும், முப்பட்டகத்தில் பட்ட ஒளியாகச் சிதறும் வானவில் எண்ணங்களை கோர்ப்பதற்கும் இந்த 20 மணி நேரம் அவசியமாகிறது. அதுவும், 2-3 வார பணிநிமித்த பயணங்களுக்குப்பின், இந்த ஒய்வு - இல்லை - மோனநிலை அத்தியாவசியத்தேவையாகிறது! 2-3 வாரப்பயணங்கள் பெரும்பாலும் 16-20 மணிநேர வேலைநாட்களைக்கொண்டவையாய் இருக்கின்றனஅல்லது 16மணிநேரம் எடுக்காமலேயே மூளையைப்பிழிந்து உடலைச் சக்கையாய் துப்பும் திறன்கொண்டவையாய் இருக்கின்றன! அதற்குப்பின் இந்த தனிமைத் தவம் இல்லாவிடில் பல மூளைகள் வெடித்துச் சிதறக்கூடும்! நல்லவேளை பயண நேரம் இத்தனை அதிகமாக இருக்கிறது என்றுகூட நினைத்ததுண்டு! நம் தேவையறிந்து உணவும் நீரும் பரிமாறும் விமான பணியாளர்களைத்தவிர பேசுவோரில்லை! நாமாக நினைத்தாலொழிய நம் கவனத்தைக் கவராத தொலைக்காட்சிப்பெட்டிகள் தவிர தவம் கலைக்கும் மேனகைகள் இல்லை! இப்படிப்பட்ட ஒரு அழகிய பயணத்தின்போது தெறித்த சிதறல்களில் சில உங்கள் பார்வைக்கு!


  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு! இது அவ்வைக்கு! கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு! இது எனக்கு! அன்னப்பறவை போல பால் தெளித்துண்ணத் தெரியாமல் எல்லாமே தெரியவேண்டும் என நினைப்பதால் நுனிப்புல் மேய்கிறேன் பலநேரங்களில்!
  • எத்தனை வெள்ளையான பரப்பு இருந்தாலும், அதிலுள்ள ஒரு புள்ளியைத்தான் பற்றித்தொங்குகிறது மனம்! அதுவும், புள்ளியை நினைப்பதில்லை என்று நினைத்தபின், கருங்குரங்கை நினைக்காமல் மருந்துண்ண முயற்சிசெய்த நோயாளியாக, வெள்ளை காணாமல் போய்,  ஏனோ மனமே புள்ளியாய்ப்போகிறது!
  • It is unbelievable! It takes a hell a lot of effort to be our own selves! It does not take even a fraction of that to be a mirror of  someone else! பிறர்க்குழைத்தே ஏழையாகிப் பழகிவிட்டோமோ! Even worse, not many are not able to bear with us when we are truly ourselves! It takes another equally gutsy person to accept someone who are just themselves!
  • வாழ்க்கை நம்மைக்கடைகிறது சதாகாலமும்! வெண்ணெய் வருமா, அமுதம் வருமா, ஆலகாலவிஷம் வருமா என்பது யாருக்குத் தெரியும்? என்ன ஆச்சர்யம், சிற்பங்களும்கூடக் கடையைத்தான்படுகின்றன!
  • ஆஹா, வாழ்வில் உற்றுத்தேறும் நிலையை எட்டிவிடலாம்போல என்று நினைக்கும்போதுதான் வாழ்க்கையின் அறுசுவைகளும் முன்பைவிட அதிக வீரியத்துடன் பரிமாறப்படுகின்றன! நாவில் ஒட்டும் இனிப்புக்கொண்ட கொம்புத்தேனும், கசந்து வழியும் பாகல்கூட்டும், காட்டமான பச்சைமிளகாயும், துவர்த்துத் தள்ளும்  பச்சைப்பாக்கும் ஒரேதட்டில் பரிமாறப்படுகின்றன! குடிப்பதற்கு கரும்புச்சாற்றோடு புளித்தகள்ளும் சாக்கடல்நீரும்! எதைக்கொள்வது என்றுதேரும் அதிகாரமின்றி!
  • குறிக்கோள்களையும்  இலக்குகளையும் அடைந்தபின் கிடைக்கும் நிறைவு, அவை கிட்டும்வரை தந்த ஊக்கத்திற்கு நிகராக பல நேரங்களில் இருப்பதில்லை! அதனால், இலக்கென்பது நகர்ந்துகொண்டே இருப்பதில்தான் அதற்கும் பெருமை! நமக்கும் உற்சாகம்!
  • பொழுதுபோக்கிற்காகச் செய்யும்போது இன்பம்பயக்கும் ஒரு செயல், கடமையாக/ வேலையாகச் செய்யும்போது அதே இன்பத்தைத்தருவதில்லை!
  • We all know how to be friendly but not many of us know how to be a good friend!
  • யோகம் பயின்றோரும்கூட மரணப்படுக்கையில் பலநாள் கழிக்க நேரலாம், யோகம் பயிலாமல் முறையற்ற செயல் பல புரிந்தோரும் பூ உதிர்வது போல, வலியில்லாமல் பிறரை வதைக்காமல் உதிர்ந்து போகலாம்! வினைகளெல்லாம் விளைவாய் மலர்வதும் மலராததும் இயற்கை விதிதான் போலும்!!
  • ஆண் என்ற அஹங்காரமும் முட்டாள்தனமுமான ஆண் மனைவியிடம் நடந்துகொள்வதுபோலத்தான் பல பெண்கள் தங்கள் வேலைக்காரர்களிடமும், சகபெண்களிடமும் நடந்துகொள்கிறார்கள், சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி, மனதை நோகடிப்பதில்! இதில் ஆணாதிக்கம் என்று தனியாக நோவானேன்!
  • நதியும் ஓடும்! சாக்கடையும் ஓடும்! ஓடுவதால் மட்டுமே தகுதி நிர்ணயிக்கப்படுவதில்லை! பிறர் கழித்ததையோ தான் கழித்ததையோ சுமந்து வருத்தத்தோடு ஓடினால் நதியாகமுடியாது!
  • மல்லிகையும் முல்லையும்போலத்தான் தேக்கும்கூட பூக்கிறது! ஆனால் தேக்கு பூப்பது ஏனோ உணரப்படுவதேயில்லை! தேக்கின் வலிமையை நினைக்கும் உலகம் அதன் பூவின் மென்மையை நினைப்பதில்லை! கொண்டாடுவதில்லை! பூத்தால் தேக்காகும் தகுதி போய்விடுகிறதுபோலும்!
  • Health is not simply the absence of  illness : It is flourishing and excellence in all aspects of the human condition. Similarly, happiness is not just absence of negative feelings!
  • If you dare to ask questions, you better have the courage to deal with the answers too! If not, it is wise not to ask questions!
  • Only a few people truly care about your problems and the rest are just curious. Even out of those who care, not all can afford to really give care! Caring, giving care, being careful are all very different things from each other!
  • Wants and needs function differently for materials and people. To be clutter free, it is better to limit buying things that one really needs instead of buying what one wants. But when it comes to people, the moment you start to need someone, all the bad behaviours start, you choke them and as a result choke yourself too. To be clutter free, it is better to be at the want level with people.
  • Most organizations think their challenges are unique and they are the first ones to solve those challenges ever in the world. Every team thinks that way too. People also think that they are unique, no one else has ever felt what they feel, face what they face, deal with the way they deal with! Really?!
  • Whatever we think as a big picture is a finer detail for someone else. Similarly, whatever we think as finer detail is big picture for someone else. But why do we assume that we are more detail oriented or more big picture seers than others !  Our main value chain could be someone else supply chain! there is no limit to this on both ends! This is true in thinking too! Why don't we recognize the need for a strong supply chain! Why do we consider people who think at a different plane as a speakers in the air or as sucked into the muddle!
  • Same person is seen as extroverted or introverted by others depending on their own levels of extroversion or introversion. There is no absolute scale to it. The same applies to self-evaluation too! But the assessment depends on where someone wants to be vs what they are. Sometimes, we deceive ourselves and assess considering only on what we want to be! It shocks us in a crude way when we realise that what we thought we are and what we really are two different things!
  • The moment we consider attitudes and ability to stand by principles as just competence instead of considering them as personality traits fitting into dichotomies, our approach towards others and our own selves changes! Competence varies and is learnable! Highly competent people too may not exhibit the competence always & it is okay /normal! Competence level swings within a range and it takes conscious effort to move from one range of competence to the other! And your competence level is influenceable by those who work closely with you, so it is important to be with more competent players than you - this is called "sat sangam"!
  • Happiness is all about alignment (or no / less contradiction) between thoughts, speech / expressions and deeds! If you can not speak about or share what you are thinking as is or do what you are thinking, it creates stress on you. If you can not act as you spoke or expressed, it creates stress on others and as a result it affects you.
  • Only the logical people seem to have the ability to love another person! Because they are able to understand why someone behaves the way they behave and because they are able to understand that behaviour is an expression of competence, they are able to accept another person as is! This is just the opposite of the blind unconditional love! Unconditional love may make someone feel like a doormat! But this is knowing what the others are doing but giving them room to learn and grow.
  • Knowing where the gap is and not able to fix it creates more frustration. that is why many Lean initiatives / Agile initiatives feel very frustrating to those responsible for transformation and who are part of transformation alike! this is pretty much similar to the learning theory! knowing what to do but not able to do the same makes people feel guilty and frustrated. This is when someone needs a good mentor or a coach or a guru!
  • Concepts from every stream of life seem to melt into a single pot! They are all fundamentally the same! That is why statements like "professionally I am a good person but personally I am not" or vice versa are lies - intentional / unintentional or conscious / subconscious - we tell others or to our own nagging minds!
  • Sometimes, it is a good idea to check-in all your books in your luggage! it gives you time to write down instead of reading :-)
  • Watching a movie is not a bad idea at times! I could watch a movie called "Monsoon Wedding"! Good attempt to express unexpressed nuances of life! If it was in Tamil, the title would have been கார்காலக்கல்யாணம்! Maybe! Like a movie song!

தமிழில் எண்ணச்சிதறல்கள் என்று பெயரிட்டிருப்பேனோ!

No comments:

Post a Comment