Tuesday, May 20, 2014

பொதுவாயில்லாத உலகப்பொதுமறைகள்!!!

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்! உண்மையாகவா! இது அனைவருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழாமலில்லை!

கண் தெரியாத ஒருவர், பிறர் தன் மேல் மோதிவிடாமலிருக்க ஒரு விளக்கைக் கையில் எடுத்துச் சென்ற கதையை நாம் அனைவரும் அறிவோம்விளக்கேந்திய பார்வையற்றவரைப் போலபிறர் தன்னைக் கிழித்துவிடாமலிருக்கத்தான் கைம்பெண்கள் பலரும் வெள்ளாடை அணிந்து, தலை மழித்துக் கொண்டனரோ? பெண் விடுதலை எவ்வளவோ முன்னேறிய பின்னும் தன்னை சிறையிலிட்டுக்கொள்ளும் பெண்கள் இன்னும் எத்தனை பேர்!

உலகப் பொதுமறைகள் உண்மையில் அனைவருக்கும் பொதுவானவைதானா!

விளக்கை எடுத்துசென்ற பார்வையற்றவர், விளக்கு அணைந்து போனது தெரியாமல் தொடர்ந்து சென்றதால், ஒருவர் மீது மோதிவிட்டதாகவும், விளக்கு கையிலிருப்பதால் கிடைத்த தவறான பாதுகாப்பு உணர்வு தன் எச்சரிக்கை உணர்வைக் கெடுத்துவிட்டது என்று குறை கூறியதாகவும் மற்றொரு கதை உண்டு!! இதற்கு என்ன பதிலுண்டு வாழ்வில்!!

No comments:

Post a Comment