Saturday, December 31, 2016

2017!!!

யாது மாகி நின்றாய் -- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்

போதும் இங்கு மாந்தர் -- வாழும்
பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்

கர்ம யோக மொன்றே -- உலகில்
காக்கு மென்னும் வேதம்

தர்ம நீதி சிறிதும் -- இங்கே
தவற லென்ப தின்றி

மர்ம மான பொருளாம் -- நின்றன்
மலர டிக்கண் நெஞ்சம்

செம்மை யுற்று நாளும் -- சேர்ந்தே
தேசு கூட வேண்டும்.


 - பாரதி

Wednesday, December 28, 2016

Shivakami

After a fairly long time, I got some time to read through some Tamil literature. Sure, the gap was not just due to time; it was also a decision not to read Manickavaachakar for some time. This week, I decided to read but not Manickavaachakar . Instead I read Abirami Andathi and a bit of Sundarar. They were melting as well. Many of the poems made me stop to reflect. Intensity was pretty strong. This particular poem from Abirami Andathi caught me thinking deeply…

மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி, என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும்படிஒரு பாகம் கொண்டாளும் பராபரையே

The poet is surprised that Shakti appeared in front of him as a result of his prayers and puja though She is beyond all that languages could describe and thinking could explain. He is also wondering how She could take up the left half of Shiva while Manmadan was burnt by Shiva when he tried to distract Shiva from his Tapas

The "Ardhanaree" form fascinated me too. I always wondered why Hinduism came up with such an idea. Is it to show / depict that genders do not matter or all genders are the same/equal or irrespective your gender you are part of a creative whole or only if genders work together in harmony great things are accomplished or one gender alone is not sufficient for the world to thrive and hence it is better for both the genders to behave themselves or is it to show that all of us have "prescribed qualities" of both genders in us . I don’t know the exact answer but this form keeps me thinking.

In addition to the above questions about Ardhanaree form, like the poet, I am also wondering how was it possible for Her, when Manmadan was not able to do!! Not only he failed to distract Shiva, he turned to heap of ash just by His look! But She could become half of Him.  More interestingly He did not even consider burning Her… rather He invited Her and merged Her to be His better half! What made Her special?  Does Shivakami mean the one likes Shiva or the one liked by Shiva? Is She Shivakami because She liked Him or because He liked Her or both. The word is so intelligently coined, it can be interpreted in any of the three ways… Interesting… Though I read this particular poem only now, the question had struck me a while ago - much before reading the poem. I was thinking about Her so deeply for about a month or so. I should say, my love for Parvathi grew multi-fold in the last one year…

Why is She special and how could She do it with such an ease? Was it Her beauty? No, it can't be! He was ascetic! There was no way that He would give in! Moreover, She would not have used it as a means for sure… She is not Menaka or Ramba or Urvasi after all… Was it Her equal mental stature? Maybe… Was it Her quest for knowledge about tapas? Maybe… I feel, more than all that, it is Her pure and divine intention… manmadan had intentions to distract Him but She did not! The other part of the question is, why did She decide to be part of Him? She could produce anything She needed without Him! So what made Him so special to Her? She was also a great tapaswini and was not distractible at all. But, She joined His celestial dance! Laasya (feminine version of Shiva Thandavam) was formed! 108 ways of tapas was described and shared with rishis! Everything They created together was divine and only divine… Nothing substandard… Births of Ganesha and Murugan were mystique… Ganesha came from Her alone and Murugan came from Him alone! What does Their story convey? I am still curious… Maybe more than ever before Hope I find an answer sometime in my life…

Coming back to the poem, maybe it should have been "வியக்கும்படி" instead of "பழிக்கும்படி". I feel just for rhyming purposes the poet must have used "பழிக்கும்படி"… If he was intentional about the choice of word, I would probably fight him… 

Thursday, December 15, 2016

மரணப்படுக்கையிலும்...

ஒவ்வொரு மரணமும் ஒரு உந்துதலை விட்டுச்செல்கிறது! நமது கருத்தொத்த சிந்தனைகள் கொள்ளாதவராயினும், முரண்பட்ட செயல்களுடையவராயினும் வாழும்நாளில் நம்மால் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டவராயினும், ஏனோ எல்லா மரணங்களும் ஏதோ ஒரு ஊக்கத்தை, செயல்குறிப்பை அத்தோடு ஒரு வெறுமையை மனதில்விதைத்துத்தான் செல்கின்றன!

விடுமுறைக்கு போட்டுவைத்த திட்டங்கள் மிக எளிதாகக் காலாவதி ஆகிவிட்டன! மீண்டும் ஒரு எண்ணக்கோர்வை! (கட்டுரைகளை முழுதாய் எழுதும் எண்ணமும் நேரமும் இல்லாமல் இப்படி சிதறல்களையும் கோர்வைகளையும் தெளிக்கும் மனோபாவம் விரைவில் மாறும் என்று நம்புவோம்!!!)

  • என்றோவாங்கிவைத்த  வைரமுத்துவின் தமிழுக்கும் நிறமுண்டு இன்று வாசிக்கக்கிடைத்தது தற்செயல்தான் என்று உறுதியாய்க் கூறமுடியவில்லை! "மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற அவரது கவிதை இந்தத்தொகுப்பில் இருக்கும் என்று நான் அறிந்திராததால் தற்செயலென்றுகொண்டாலும் பிழையில்லை! மரணப்படுக்கைமட்டுமே ஒன்றாயிருப்பதுவும் விதியின் கோலம்தான்போலும்! காலம் கொன்றுபோட்ட உணர்வுகள் எத்தனை! காலத்தைக் காரணமாய்க்காட்டி மனிதர்கள் கொன்றுபோட்டவை எத்தனை!

  • வைரமுத்துமட்டுமல்ல சுஜாதாவும் மனதுக்குள் வந்துபோனார்! வயோதிகம்குறித்த தன் கட்டுரையில் தினமும் Obituary பார்ப்பதாகவும் அதில் இறந்தோர் வயதைக்கவனிப்பதாகவும் குறித்திருந்தார்! என் மனமோ தனி மனிதர்களைப் பார்க்கிறது. கலாமின் மரணத்தின்போதும் சரி ஜெயலலிதாவின் மரணத்தின்போதும் சரி, கடைசி நிமிடத்தில் சரியான விதமாக நடத்தப்பட்டார்களா என்ற கேள்வி உள்ளோடிற்று! பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்ததது சரியான உவமை, வெற்றுக்கற்பனையில்லை என்றேதான் நினைத்திருக்கிறேன்! உடல் செயலிழந்தும் உயிர் பிரியாதிருத்தல், தனி மனிதர்களுக்கு அம்புப்படுக்கை போன்றதே, அது பீஷ்மராகவேயிருந்தாலும் சரி! சாதாரணர்கள் நிலை சொல்லுந்தரமன்று! அம்புபடுக்கையில் விழாதிருக்க ஆரோக்கியத்தைக்காக்கத் தேவையான உடல்பயிற்சிகளையும் உணவுமுறைகைளயும் இன்னும் தீவிரப்படுத்துவது இந்த மரணங்கள்தான்!

  • புகழும், செல்வமும், ஆள்பலமும், அதிகாரபலமும் அம்புப்படுக்கையிலிருந்து நம்மைக்காக்கும் வலிமையற்றவை! ஆனால் இவையில்லாமல்போனால் அம்பின் வீர்யம் இன்னும் அதிகமிருக்கும்!

  • நதியில்விழுந்த இலையாய் நகர்வதற்கும் அம்பில்விழுந்த இலையாய்க்கிழிவதற்கும்  கர்மவினையல்லாமல் வேறேதேனும் விளக்கமுண்டா!

  • ஊக்கத்துடன் செயல்பட, முன்னேற்றம் அல்லது மாற்றம்குறித்துச்  சிந்திக்க சமூகம் குறித்த "நல்ல கோபம்"  (Creative Discontent)  வேண்டும் என்பது திரு. அமர்த்தியா சென் அவர்களின் வாதம். எனக்கென்னவோ சமூகம் குறித்த கோபங்கள் / வருத்தங்கள் மட்டுமே காரணமில்லை என்று தோன்றுகிறதுதனிப்பட்ட கோபமும் வருத்தமும்கூடக் காரணமாகக்கூடும்! மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமலிருக்க ஏதோ ஒரு வலி வேண்டியிருக்கிறது! கருமமே கண்ணாயிருக்க எவ்வெவர் தீமையோ தேவையாயிருக்கிறது! செவ்வி அருமைபாராமலிருக்க ஏதோ ஒரு அவமதிப்பின் தேவையிருக்கிறது! நீதிநெறி விளக்கம் என் எண்ணஓட்டத்தோடு முரண்பட்டு நிற்பதாய்ப்படுகிறது !

  • ஒரு ஆணின் வெற்றியின்போதோ அல்லது மரணத்தின்போதோ அவர் ஒரு ஆண் என்பது தனியாய் குறிப்பிடப்படுவதேயில்லை! ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றாலும்சரி இறந்து போனாலும்சரி அவர் ஒரு பெண் என்பதை நினைவூட்ட மறப்பதேயில்லை! வேலைசெய்யும்போது மூளைதவிர பிற பாகங்கள் நினைவிலிருப்பதில்லை என்பதையும், இப்படி தனியாய்க்  குறிப்பிடப்படுவதை பெரும்பாலான பெண்கள் ரசிப்பதில்லை - இன்னும்சொல்லப்போனால் வெறுக்கிறார்கள் என்பதையும் உலகம் எப்போது புரிந்துகொள்ளும்? பெண்ணாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றார் என்ற வாக்கியம் பெரும்பாம்பாலும் ஒரு எரிச்சலைத்தருகிறது! "இயலாமையைத்தாண்டி" என்ற தொனிதான் காரணம். ஊனமுற்றவர்களை மாற்று திறனாளி என்று பெயரளவில் மாற்றிவிட்டு "முடவன்" என்றழைக்கும் பரிகாசம் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருப்பது போலத்தான் இதுவும். சரியாகச்சொன்னால் இது இன்னும் இழிவு!! பெண்ணாயிருப்பது ஒரு குறைபாடா என்ன? ஒரு குறைபாடுபோல் சித்தரிப்பது ஆணவத்தின் உச்சமாக பெண்களால் உணரப்படுகிறதென்று எப்போது இவர்களுக்குப் புரியும்?


  • இறக்கும்வரை வெறுக்கப்பட்டவர்கள்கூட இறந்தவுடன் நல்லவர்களாய் சித்தரிக்கப்படுகிறார்கள்! இறந்தபின் ஒருவரது நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்டுவோர், இருக்கும்போது தவறுகளைத் தேடிப்பிடித்து திட்டுவதேன்? இருக்கும்போதே  நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்ட முடியாதா? விமான நிலையத்தில்  காட்டும் அன்பு போலத்தான் இதுவும்!


  • நன்றாக மரிப்பதென்பது நன்றாக வாழ்வதின் மறுபக்கம்தானன்றோ! மரித்தபின் மறுவாழ்வு இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் ஒவ்வொரு மணித்துளியும் உற்சாகமாய் உத்வேகமாய் வாழ்ந்திட்டால் மரணப்படுக்கையில் நினைவுகூற நிறைவிருக்கும்! குறையோடு இறக்கும் ஆன்மா மறுபடி பிறக்கும் என்றொரு நம்பிக்கை உண்டு! ஆனால் எனக்கென்னவோ அப்படி chance எடுக்க பயம், ஒருவேளை அப்படி பிறக்கமுடியாதென்றால் அந்தகுறைகள் என்னவாகும்!! எனவே தீவிரமாய்மனநிறைவாய்  வாழ்வது நலம்! மரணப்படுக்கையில் நிறைவாய் நினைவு கூற!...

Tuesday, November 1, 2016

எழுதாமல் போவேனோ?

"விநாயகச்சதுர்த்தியில் செயல்கள் தொடங்கி கேள்விப்பட்டிருக்கிறேன், நிறுத்திக் கேள்விப்படவில்லை, ஏன் இந்த மௌனம்" என்ற கேள்வி நண்பர்களிடமிருந்து வருவது மகிழ்ச்சியென்றால் எழுத நினைத்தும் எழுதாதது வருத்தம்!

அகடும் முகடுமாக மாறி மாறி ஓடும் காலஓட்டத்தில், விரும்பியவற்றுக்கு 30 நிமிடம் ஒதுக்க இயலாமல் அல்லாடும் காலகட்டம் இது!! காப்பியங்களின் அரசிகள் முதல் கார்பன் துகள் வரை, எழுதநினைத்ததைக் குறித்துவைத்த பக்கங்கள் ஒன்று பலவானது! அஞ்ஞாதவாசம் முதல் உபவாசம் வரை எழுத ஆரம்பித்து முடிக்காத கட்டுரைகள் ஒருகையளவு தேறும்வைரமுத்துவின் "தமிழுக்கும் நிறம் உண்டு" முதல் ஜே டி க்ரூஸின் "கொற்கை" வரை வாங்கிவைத்தும் திருப்பாத பக்கங்களும் பலவானது! Asimov-ன் புத்தகங்களும் அவ்வையின் புத்தகங்களும் ஒரே வரிசையில் உறங்குகின்றன ஒரு சில மாதங்களாய்!தொலைபேசியில் சில எண்கள் மறைந்தே போயினபோலும்! பேசாமல்விட்ட  நண்பர்களும் உறவினர்களும் பொறுமை காப்பதால் இன்னும் அவ்வப்போது பண்டிகைகளுக்கான வாழ்த்துகள் வருகின்றன!


வருடத்தின் மீதி நாளில் எழுதாமல் போவேனோ என்ற எண்ணமே கசக்கிறது! ஆனால் 2017ல்தான் புதுகணக்கு தொடங்கக்கூடும் அதுவரை குறிப்புகள் மட்டுமே கைகூடும்போல் தெரிகிறது! பார்ப்போம்!! எத்தனை நாள் எழுதாமல் தாக்குபிடிக்கமுடிகிறதென்று!!!