கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்ற சொற்றொடர் குறித்த தகவல்கள் தேடினால், கடன் கொடுத்தவர்கள்தாம் கலங்கி நிற்பதாகப் பல்வேறு கட்டுரைகள், கவிதைகள் வலைக்களம் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன! ஒருவேளை பணத்தைக் கடனாகத் தந்தவரின் பெற்றவரின் நிலைகள் இப்படி ஆகியிருக்கலாம்!
நன்றிக்கடன்பட்டவர் நெஞ்சங்கள் பெரும்பாலும் கலங்கித்தான் இருப்பதாகப்படுகிறது எனக்கு! கடனின் (உதவியின்) அளவு அதிகமாக அதிகமாக இயல்பாகப் பழகும் உரிமை இல்லாமல்தான் போய்விடுகிறது! அதுவும் காலத்தால் செய்யப்பட்டதாயின், வீரியம் இன்னும் அதிகம்!
கடன் வாங்காதீர்கள்! கடன் இட்டுநிரப்பும் வசதிகளின் சுகத்தைவிட கடன் வாங்காத சுதந்திரம் தரும் சுகம் அதிகம்! பொருளோ உதவியோ, கடன் வாங்காமையால், உங்களிடம் இல்லாத வசதிகள் நீங்கள் கடக்கவேண்டிய தூரத்தை நினைவூட்டுவதாகத் தொக்கி நிற்பது நிறைவான நிம்மதியான இயல்பான வாழ்வு தரும் என்றே எனக்குத் தோன்றுகிறது!